2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வடிகான் துர்நாற்றத்தால் நோயாளிகள் அவஸ்தை

R.Maheshwary   / 2023 ஜனவரி 10 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

நாவலப்பிட்டி மாவட்டவைத்தியசாலைக்குசெல்லும் பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்ள வடிகானிலிருந்து வரும் துர்நாற்றத்தினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

தொடர்ச்சியாக இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் வர்த்தக நிலையங்களுக்குச் செல்லும் நுகர்வோர்,   பாதசாரிகள், வைத்தியசாலைக்குச் செல்லும்  நோயாளர்கள் உள்ளிட்டவர்களும் சுகாதார ரீதியிலான பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர்.

மேலும் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாதாந்த  கிளினிக்குக்கு வருபவர்களும் குறித்த பாதை ஓரத்தில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலையில், இத்துர்நாற்றம் அவர்களுக்கு வேறு ​நோய்களை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

 எனவே, நாவலபிட்டிவைத்தியசாலைக்குச் செல்லும் வீதியின் வடிகான்களை சுத்தப்படுத்தி தருமாறு பொதுமக்கள் நகரசபை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .