2026 ஏப்ரல் 23, வியாழக்கிழமை

வன்புணரப்பட்ட சிறுமி மரணம்

Editorial   / 2018 ஜனவரி 15 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

திஸ்ஸமகாராம பிரதேசத்தில் வைத்து, இளைஞர்கள் மூவரால் வன்புணரப்பட்ட 14 வயதுச் சிறுமி, இரண்டொரு நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார். ஹம்பாந்தோட்டை தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே, அச்சிறுமி நேற்று (14) உயிரிழந்துள்ளாரென, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த சிறுமி, 9ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தவர் என்றும், இவருடன் காதல் தொடர்பை வைத்திருந்த இளைஞனும், அவரது நண்பர்களும் மது அருந்திவிட்டு, குறித்த சிறுமியை வன்புணர்ந்துள்ளனரெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி, நேற்று (14) உயிரிழந்துள்ளாரெனவும், இவரால் எழுதப்பட்ட கடிதமொன்றையும் ​தாம் மீட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .