Yuganthini / 2017 ஜூன் 18 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
மஹாவலி கங்கையின் மிகவும் அழகிய பிரதேசமாகக் கருதப்படும் பேராதனை வராதென்னையில், இதுவரை, 300க்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதால், அவ்விடத்தில், நீராடுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, பொலிஸார் சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும், கண்டிக்கு சுற்றுலாவரும் உள்நாட்டுச் சுற்றுலா பயணிகள், நீராடுவதற்கு இவ்விடத்தை தேர்தெடுப்பது வழக்கமாக உள்ளதாகக் கூறும் பொலிஸார், இவ்விடத்தின் ஆபத்தை கருத்திற்கொள்ளாமல் நீராடச் செல்வதால் இதுவரை 300 இற்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இப்பகுதியில் ஆபத்து நிறைந்துள்ளதை சுட்டிக்காட்டும் அறிவித்தல் பலகை பொருத்தப்பட்டுள்ளப் போதிலும், அதனை பொருட்படுத்தாது, சுற்றுலா பயணிகள் கங்கையில் பாய்ந்து நீராட முனைவதினால் இவ்வாறான உயிர் ஆபத்துகளை எதிர்கொளவதாக, பொலிஸார் மேலும் கூறினர்.
எனவே, உயிராபத்துகளை தவிர்த்துக்கொள்வதற்காக இப்பகுதியில் நீராட வேண்டாமென்றும், பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .