2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வலப்பனை பிரதேசசபை உபதவிசாளர் பதவி விலகினார்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 31 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

  வலப்பனை பிரதேச சபையில் கடந்த நான்கரை வருடங்களாக உப தவிசாளராக பதவி வகித்து வந்த  பெருமாள் இராஜேந்திரன் (ஈஸ்டன்) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது சுய விருப்பத்தின் பேரில் இவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் உடப்புஸ்ஸலாவை பிரதேசத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தொழிலாளர்  காங்கிரஸின் தீவிர ஆதரவாளராக விளங்கி வந்த இவர்,  வலப்பனை பிரதேச சபையில் உறுப்பினராக இரண்டு முறையும், உப தவிசாளராக பதவியில் இரண்டு முறையும் பதவி வகித்து வந்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கு கையளித்துள்ள நிலையில், இ.தொ.காவின் ஸ்தாபக தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 23வது சிரார்த்த தினமான  நேற்று (30) அன்று கொழும்பு சௌமிய பவனில் இடம்பெற்ற நிகழ்வில் இவரின் பதவி விலகலை ஏற்று இவரின் சேவையை பாராட்டி காங்கிரஸ் குழாம்  கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X