R.Maheshwary / 2022 நவம்பர் 17 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 28 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
சபை அமர்வு வலப்பனை பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் சபை தவிசாளர் டி.ஆனந்த ஹித்தெட்டியகே தலைமையில் இன்று (17) காலை ஆரம்பமானது.
55 உறுப்பினர்களைக் கொண்ட வலப்பனை பிரதேசசபையில் இன்றைய சபை அமர்வில் 34 உறுப்பினர்களே கலந்துகொண்டனர்.
இதன்போதான வாக்களிப்பில் ஜே.வி.பி.உறுப்பினர் நளின் தேசப்பிரிய எதிராக வாக்களித்ததுடன், இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் கட்சியில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் பி.சௌந்தராஜ் ,தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளி கட்சியான மலையக மக்கள் முன்னணி உறுப்பினர்களான கலியுகநாதன்,ஹரிச்சந்திரன் ஆகியோர் பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடுநிலை வகித்தனர்.
இந்த நிலையில் 28 மேலதிக வாக்குகளால் வலப்பனை பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பட்ஸெட் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago