2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

வழமைக்குத் திரும்பியது ஒலிரூட் போக்குவரத்து

Editorial   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

தலவாக்கலை – பூண்டுலோயா பிரதான வீதியில்   ஒலிரூட் பகுதியில் சரிந்து விழுந்த பாரிய மண்சரிவு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து நேற்று (26) முதல் வழமைக்குத் திரும்பியது.

மண்சரிவை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை தலவாக்கலை- பூண்டுலோயா இருவழி    பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.

இன்று (26) காலை முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர்  சரிந்த மண்ணை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மதியம் 12.30 மணியளவில் மண்சரிவு அகற்றப்பட்டது.

எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .