R.Maheshwary / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று (19) இரவு 11.45 மணியளவில் வான் ஒன்று பள்ளத்தில் பாய்ந்ததில் சாரதி உள்ளிட்ட ஐவர் காயமடைந்து, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த வான், வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதுடன், மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர்களே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
வானில் 12 பேர் பயணித்துள்ள நிலையில், சாரதி உள்ளிட்ட ஐவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன், ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.
யாத்திரையை முடித்துவிட்டு பொகவந்தலாவை- பலாங்கொடை வழியாக மாத்தறை செல்ல தீர்மானித்த இவர்கள், வழி தவறி சாமிமலை வீதியின் ஊடாக சென்ற வேளையிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
வாகன சாரதிக்கு வானின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
34 minute ago
40 minute ago