R.Maheshwary / 2023 ஜனவரி 23 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மோட்டார் சைக்கிளொன்றுக்கு வழியை விடுவதற்காக ஒதுங்கிய லொறியொன்று ஆற்றில் விழுந்த சம்பவம் ஒன்று, நேற்று (22) கொட்டகலையில் பதிவாகியுள்ளது.
இதன்போது லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என திம்புளபத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) மாலை 4 மணியளவில் கொட்டகலை- யதன்சைட் தோட்டத்துக்கு செல்லும் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யதன்சைட் தோட்டத்திலிருந்து கொட்டகலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்த லொறியானது, எதிர்திசையில் வந்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு பாலத்தின் மத்தியில் இடமளிக்க முற்பட்ட போது பாலத்தின் கீழே 20 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது.
லொறியில் மேழும் இருவர் பயணித்துள்ள நிலையில், அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago