Janu / 2024 மார்ச் 04 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா - கொழும்பு பிரதான வீதியின் லபுக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (04) பதிவாகியுள்ளது .
நுவரெலியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர்த் திசையில் கண்டியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியே இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது .
இவ் விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த நெதர்லாந்து நாட்டு பிரஜைகள் இருவர் படு காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் , விபத்துக்குள்ளான வேனில் தடையாளி முறையாக இயங்காமை மற்றும் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இவ் விபத்தின் போது எட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வேணில் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .
செ.திவாகரன், டி.சந்ரு



4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
7 hours ago