2025 மே 08, வியாழக்கிழமை

வான்கதவை மேலும் திறக்ககவும்

Janu   / 2023 செப்டெம்பர் 07 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை நகரத்திற்குட்பட்ட பிரதேசத்தில் அடிக்கடி ஏற்படும் வெள்ள பெருக்கு  அப்பகுதி மக்களுக்கு  தொடர்ச்சியாக ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதனால் அதற்கான தீர்வு ஒன்றை பெற்றுத்தருமாறு கோரிக்கை முன்வைக்கப்படுகின்றர்.

தற்போது சீரற்ற காலநிலை காரணமக வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.அவ்வாறு வெள்ளபெருக்கு ஏற்படும் போது மேலதிக நீரை வெளியேற்ற வான்கதவு திறக்கப்படுகின்றது.அவ்வாறு  வான் கதவினூடாக வெளியேற்றப்படும் நீர் ஒரு குறிப்பிட்டளவு நீரே வெளியேறுகின்றது.

எனவே வான் கதவு திறப்பதில் கூட ஒரு ஓழுங்கு முறையில்லை என்று மக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.இதனால் பலத்த மழை பெய்யும் பொழுது அங்கு ஏற்படும் வெள்ளபெருக்கு

ஆற்றுக்கு இரு பக்கங்களிலும்  சுமார் 100 வரையான குடும்பங்களை சேர்ந்த மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தீடிரென ஏற்படும் வெள்ள அனர்த்தத்தால் தாம் பாதிக்கப்படுவதாக இவர்கள் கவலைத்தெரிவிக்கின்றனர். பிரதேசத்தை அண்மித்த சுமார் 47 குடும்பங்கள் வாழுகின்றனர்.ஒவ்வொரு வருடமும் மழை  காலம் வரும் போது வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர்.அவ்வாறு வரும் வெள்ளம் சுமார் 5 அல்லது 6 அடி வரை வருகின்றது

எனவே மேலதிக நீரை வெளியேற்றும் அளவினை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கப்படுமாகவிருந்தால் ஏற்படவிருக்கும் ஆபத்தினை தடுக்க முடியும் என வட்டவளை ஆற்றினை மையப்படுத்தி வசிக்கும் மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இரா.யோகேசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X