R.Maheshwary / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
வாய் பேசமுடியாத இருபது வயதான தனது இளைய மகளை பல வருடங்களாக துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்த 52 வயதான தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த தனது மூத்த சகோதரியின் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த வாய் பேசமுடியாத யுவதி சென்றுள்ளார்.
இதன்போது கதிர்காமத்திலுள்ள தாம் பிறந்த வீட்டுக்கு செல்லுமாறு, மூத்த சகோதரி தெரிவித்த போது, தனக்கு அங்கு செல்ல முடியாதென்றும் தந்தை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதாக தனது மொழி நடையில் சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 12 வயதிலிருந்து தந்தையால் தான் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாவதாகவும் பாதிக்கப்பட்ட யுவதி தெரிவித்துள்ளார்.
இதனையுடுத்து குறித்த சகோதரி புத்தல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, தந்தை கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கதிர்காமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .