Freelancer / 2022 மே 07 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவுகளின் காரணமாகதான் நாடு இன்று கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது என்றும் மேலும் நாட்டை பாதாளத்துக்குள் தள்ளும் முகமாகவே அவசரகாலச் சட்டத்தை அவர் பிரகனடனம் செய்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “வரி குறைப்பு, இரசாயன உரத்துக்கான தடை உட்பட ஜனாதிபதி கடந்த இரண்டு வருடங்களாக எடுத்திருந்த தன்னிச்சையான முடிவுகளால் தான் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கம் அனைத்து விதத்திலும் தோல்விக்கண்டுள்ளது. இதனால்தான் நாளுக்கு நாள் மக்கள் புரட்சி வெடித்துவருகிறது. நிபுணர்களுடன் கலந்துரையாடி தீர்மானங்களை எடுத்திருந்தால் என்று இந்நிலை ஏற்பட்டிருக்காது.
போராட்டங்களை கட்டுப்படுத்த அவசரகாலச் சட்டத்தை கையில் எடுப்பது தீர்வாகாது. இதன்மூலம் மக்கள் போராட்டங்களை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது. ஆரசாங்கத்தின் மீது நூறு சதவீதம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி போராட்டங்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற போர்வையில் மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்து சுதந்திரத்தையும் பறிக்க வேண்டாம். வாழ வழியில்லாதமையின் காரணமாகவே மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். இங்கு அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இல்லை.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு இலங்கையில் உள்ள அனைத்து இராஜதந்திரிகளும் எதிர்ப்பையும் கவலைளையும் வெளியிட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் உட்பட பல நாடுகளில் இருந்து கிடைக்கபெறும் உதவிகளுக்கு ஜனாதிபதியின் தீர்மானம் பாதகமாக அமையக்கூடும் என்பதால் உடனடியாக அவசரகாலச் சட்டத்தை மீளப்பெற வேண்டும்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago