2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

விகாரைக்கு முன்பாக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எஸ்.கணேசன்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ஹைட்ரி தோட்டத்திலுள்ள விகாரைக்கு முன்பாக, இன்று (22)  கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ரொசல்ல- டெம்பல்ஸ்ட்டோவ் தோட்டத்திலுள்ள சிறுவன் ஒருவன்,  ஹைட்ரி தோட்டத்திலுள்ள  விகாரையின் பிக்கு ஒருவரால் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிறுவனுக்கு நீதிகோரியும், ஏனைய சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், மேற்படி பிக்குவுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அழுத்தம் கொடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன்,  பாதிக்கப்பட்ட சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X