2025 ஜூலை 23, புதன்கிழமை

விகாரையில் கொள்ளை

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் 

பூண்டுலோயா, கல்பிட்டி புசுல்பிட்டிய ரஜமகா விகாரைக்கு வந்த இனந்தெரியாத நால்வர், விகாரையின் விகாராதிபதி மற்றும் காவலாளியை கட்டிவைத்துவிட்டு, விகாரையிலிருந்த  புத்தர் சிலையை சேதப்படுத்தியுள்ளதுடன், சைத்தியத்திலுள்ள  புனித பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக, பூண்டுலோயா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நால்வரும் இரவு 9 மணிமுதல் அதிகாலை 1 மணிவரை, விகரைக்குள் இருந்ததாக விகாரையில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டிவி காமராவில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .