2025 ஜூலை 12, சனிக்கிழமை

விபத்தல் பெண் பலி;சாரதி கைது

ஆ.ரமேஸ்   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா உடப்புஸ்ஸலாவை பிரதான வீதி, ஆவாஎளிய வைத்தியசாலை சந்திக்கு அருகில், புதன்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில்,  இராகலை லிடேஸ்டல் தோட்டத்தைச் சேர்ந்த
வேலு பொன்னம்மா (வயது 79) என்ற பெண் உயிரிழந்துள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண், வீதியை கடக்க முயன்றபோது, அவ்வீதி வழியாக மிக வேகமாக வந்த முச்சக்கரவண்டி பெண்ணின் மீது மோதியதில் பெண் ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஆவாஎளியவைச் சேர்ந்த முச்சக்கரவண்டியின் சாரதியை (52) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவருக்கு, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என்றும் அவர் மதுபானம் அருந்திய நிலையிலேயே, முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளாரென்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .