2025 ஜூலை 14, திங்கட்கிழமை

விபத்தால் கோயில் உண்டியல் சேதம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 21 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

பலாங்கொடையிலிருந்து கொட்டகலைக்கு, மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறி, இன்றுக் காலை 5.30 மணியளவில், ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் உண்டியலில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

லொறியில் பயணித்த நால்வருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரைக் கலக்கமே, இவ்விபத்துக்குக் காரணமென தெரியவந்துள்ளது.

விபத்தால், கோயில் உண்டியல் சேதமாகியுள்ளதெனவும் உண்டியலுக்கான பணத்தொகையை தருவதாக, கோயில் பரிபால சபையினரிடம், லொறி உரிமையாளர் உறுதியளித்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .