2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இரண்டரை வயது குழந்தை பலி

R.Maheshwary   / 2023 ஜனவரி 16 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

இராகலை -சென் லெணாட்ஸ் தோட்டத்தில் நேற்று (15) மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

14 வயது  சிறுவன் ஒருவன்,  தனது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓட்டோவில்,  தனது  இரண்டரை வயது சகோதரனை ஏற்றிக்கொண்டு,இராகலை நடுகணக்கு பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது வேக கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ, கவ்வாத்து செய்யப்பட்ட தேயிலை மலையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது ஓட்டோவிலிருந்து  தேயிலை மலையில் வீசுப்பட்டு வீழ்ந்த குழந்தை பலத்த காயங்ளுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதென இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் ஓட்டோவை செலுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .