2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.கணேசன், ஆர்.ரமேஸ்

ஹட்டன் சாஞ்சிமலை பிரதான வீதி, டிக்கோயா பட்டகலை சந்தியில், இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா போடைஸ் 30ஆம் ஏக்கர் பகுதியிலிருந்து புளியாவத்தை நகரை நோக்கி சென்றி மோட்டார் சைக்கிளும் சாஞ்சிமலையிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனுமே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பஸ்ஸின் அதிக வேகமே இவ்விபத்துக்குக்  காரணம் என்றுத் தெரிவித்த பொலிஸார், பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .