Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 22 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் முன்சில்லில் சிக்கி படுகாயமடைந்த 60 வயது நபர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ லொய்னோன் தோட்டத்தைச் சேர்ந்த நபரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த நபர், பாதையைக் கடக்க முற்பட்டபோது விபத்தை எதிர்கொண்டுள்ளாரெனத் தெரியவருகிறது.
விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .