2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விபத்தில் பெற்றோரை இழந்த மாணவி பரீட்சையில் சாதித்தார்

R.Maheshwary   / 2023 ஜனவரி 26 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

2021ஆம் ஆண்டு பசறை பகுதியில் இடம்பெற்ற பசறை பஸ் விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ளார்.

லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, என்ற இந்த மாணவி புலமைப்பரிசில் பரீட்சையில் 174 புள்ளிகளைப்பெற்று  சித்தியடைந்துள்ளார்.  

பசறை 13 ஆம் கட்டை பகுதியில் 2021 மார்ச் 20 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் பலியாகினர். சுமார் 32 பேர் காயமடைந்தனர். 

இவ்விபத்தில் அந்தோனி நோவா (வயது - 32) என்பவரும், அவரது மனைவியான பெனடிகக் மெடோனோ (வயது 31) உயிரிழந்தனர்.

 அவர்களின் மகளே யூஜீனியா. பெற்றோர் உயிரிழக்கும்போது இவர் தரம் மூன்றில் கல்வி பயின்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X