2025 மே 19, திங்கட்கிழமை

விபத்தில் மூன்று இளைஞர்கள் பலி; 18 வயது சாரதி கைது

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 11 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 என் ஆராச்சி

கொழும்பு- கண்டி வீதியின்  கேகாலை, ரங்வல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த மூவரின் ஜனாஸா  நேற்று (10) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

9ஆம் திகதி இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இருவர் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் வரகாபொல, துல்ஹிரிய நங்கல்ல பகுதியைச் சேர்ந்த 27 வயதான  எம்.ஆர்.எம் ரஹ்மி, எம்.எம்.எம். மிஃப்லால் மற்றும் எம்.எம்.எம் மனசிக்கான் ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.

9 ஆம் திகதி இரவு கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வான், எதிர் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 18 வயதான வானின் சாரதி கேகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X