2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

விபத்தில் லொறிகள் சேதம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

வட்டவளை - ஆக்ர ஓயா வீதியில்,   இரண்டு லொறிகள்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தானது,  இன்று பிற்பகல் 1.30  மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக, இவ்வீதி வழியான போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டிருந்ததாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டவளையிலிருந்து ஆக்ராஓயா நோக்கிச் சென்ற வட்டவளை  லொனெக் தோட்டத்துக்குச் சொந்தமான லொறியும் ஆக்ர ஓயாவிலிருந்து வட்டவளை நோக்கிப் பயணித்த லொறியும்  இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், வாகனங்கள் இரண்டும் பாரியளவு சேதமாகியுள்ளதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .