2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வியாபாரி கொலை; மகன் உட்பட இருவர் கைது

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 16 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பதுளை-மஹியங்கனை வீதி, கய்லகொட சந்திக்கு அருகிலுள்ள ஹோட்டலின் உரிமையாளர் கொலைச்செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து, சந்தேகத்தினர் பேரில் அவரது மகன் உட்பட இருவரை,  செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி ஹோட்டலின் உரிமையாளரான சிறிபால விக்ரமத்ன (வயது 74)  என்பவர், கடந்த 2ஆம் திகதி காலை  சடலமாக மீட்கப்பட்டார்.

இவரது கழுத்துப் பகுதியில் காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், இவர் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது மகனையும் மற்றும் ஹோட்டலில் பணிப்புரிந்து வந்த ஊழியர் ஒருவரையும், செவ்வாய்க்கிழமை  கைதுசெய்துள்ளனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சினையே இக்கொலைக்கு காரணமென,  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட  இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .