R.Maheshwary / 2022 ஜூன் 07 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலைவாஞ்ஞன்
விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 05 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் 15 மற்றும் 18 வயதான யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.
குறித்த இரண்டு யுவதிகளும் தோட்டத்தில் தொழில் செய்து வந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தேடும் பணியில் அக்கரப்பத்தனை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago