Editorial / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

விவசாய நிலங்களுக்குள் உட்புகும் சில விலங்குகளை கொல்வதற்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ள அனுமதிக்கு சேவலை சின்னமாகக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
குரங்குகள்,மயில்கள் அணில்கள்,பன்றிகள் மற்றும் முள்ளம் பன்றிகளை கொல்வதற்கு வழங்கியுள்ள அனுமதியை ஏற்றுகொள்ள முடியாது. மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்காது உணவைத் தேடி செல்லும் விலங்குகளை கொல்வது என்பது பெரிய அநீதியாகும் என்று காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த விலங்குகள் வசிக்கும் காடுகளை அழித்து கட்டடங்களை கட்டுதல் மற்றும் இயற்கைக்கு ஒவ்வாத விடயங்களை மேற்கொள்வதால் தான் விலங்குகள் உணவு பற்றாக்குறையால் தமது உணவு தேவையை பூர்த்தி செய்துகொள்ள மனிதன் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன. ஆகவே காடுகளை அழித்து கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கிய அதிகாரியின் மீதும் திணைக்களத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கைகளை விலங்குகள் மீது அல்ல. எனவே இந்த முடிவை உடனடியாக விவசாய அமைச்சு மீள்ப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
12 minute ago
30 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
30 minute ago
5 hours ago