Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இரசாயனப் பொருள்களின் தரம் குறைவு மற்றும் விலையேற்றம் காரணமாக நுவரெலியா மரக்கறி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மரக்கறிச் செய்கையை கைவிட வேண்டியுள்ளதாக நுவரெலியா சதாதன்ன பிரதேசத்தில் பாரம்பரியமாக மரக்கறிகளை பயிரிடும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
50 கிலோ கொண்ட இரசாயன உரம் ஒரு மூட்டை 25 ஆயிரம் ரூபாய்க்கு சந்தையில் வெவ்வேறு பெயர்களில் விற்கப்படுவதாகவும்,இ ரசாயன உரங்களின் தரம் குறைந்ததால் காய்கறி பயிர்களின் விளைச்சல் மிகவும் குறைவாக இருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் கரட் விதைகளின் விலையும் வெகுவாக உயர்ந்துள்ளதாகவும், அந்த விதைகளை பயிரிடுவதில் நத்தையால் கடும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், நத்தைகளை அழிக்க சந்தையில் கிடைக்கும் இரசாயனங்களின் விலை மிக அதிகமாக உள்ளதென தெரிவித்த விவசாயிகள், இதனால் கரட் விளைச்சல் குறைந்து வருகிறது என்றனர்..
தாம் மரக்கறிச் செய்கையை பாரம்பரியமாக வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்ற போதிலும், மரக்கறிச் செய்கையை தொடர்வதற்கு பல இடையூறுகள் இடையூறாக உள்ளதால் மரக்கறிச் செய்கையை கைவிடும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வெலிமடை, பொரலந்த, பண்டாரவளை போன்ற பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் தமது உருளைக்கிழங்கு அறுவடையை சந்தைக்கு விடுவித்து வருவதாகவும், இவ்வாறான வேளையில் நாட்டில் எவ்வளவோ டொலர் நெருக்கடி ஏற்பட்டாலும் வெளிநாடுகளில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மிகக் குறைந்த விலையில் அவற்றை சந்தைக்கு விடுவது உள்ளூர் உருளைக்கிழங்கு விவசாயிக்கு இழைக்கப்படும் பாரிய அநீதியாகும் என இலங்கை ஒருங்கிணைந்த விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் ஒன்றியத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டிடியாராச்சி மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
2 hours ago
18 May 2025