2024 மே 03, வெள்ளிக்கிழமை

விளையாட்டு வினையாய் முடிந்தது

Mayu   / 2024 பெப்ரவரி 11 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகியதில் 12 வயது சிறுவனொருவன் ஞாயிற்று கிழமை (11) உயிரிழந்துள்ளார்.

தனிவீட்டில் வசிக்கும் பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலை தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்த போது தனது கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஆ.ரமேஸ்

குறித்த சம்பவத்தில் சிவகுமார் டிலக்சன் வயது (12) என்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

மாகாஸ்தோட்ட பகுதியில் தனிவீட்டில் தாய் மற்றும் பெண் பிள்ளைகள் இருவர் ஆண் பிள்ளை ஒருவருடன் நால்வர் வசித்து வருகின்றனர்.

தனது கணவன் இறந்து ஐந்து வருடங்கள் ஆகிய பின் தாய் பிள்ளைகளை படிக்கவைத்து வாழ்ந்து வரும் நிலையில் மூத்த மகள் பல்கலைகழக படிப்புக்கு சென்ற பின் வீட்டில் சிறிய மகள் தாய் மற்றும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் என மூவர் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் வழமைப்போல சிறுவன் உயிர் பிரிந்த இடத்தில் சவுக்கு மரம் ஒன்றில் கயிறு கட்டி விளையாடியுள்ளார்.

மரத்தில் விளாயாடிய சிறுவன் கழுத்தில் கயறு இறுகி துடிக்கிறான் காப்பாற்றுங்கள் என சம்பவத்தை அவதானித்த அருகில் உள்ள வீட்டார் கூச்சலிட்டுள்ளனர்.

இதையடுத்து மரத்துக்கு அருகில்  ஒடியவர்கள் சிறுவனை மீட்டப்போதிலும் சிறுவன் மயக்கத்தில் இருப்பதாக உணர்ந்து காவு வண்டிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

பின் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வைத்தியர்கள் சிறுவனை பரிசோதித்த போது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலம் நுவரெலியா மாவட்ட நீதவானின் மரண விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .