2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விவசாயத்தை பின்தள்ளி கஞ்சாவுக்கு முன்னுரிமை

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். கே. குமார்

வரவு- செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) உள்ளூர் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமல் இலங்கையில் கஞ்சா பயிரிடுவது குறித்து ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார் எனத் தெரிவித்துள்ள, அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவரும் நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலையத்தின் சங்கத்தின் பொதுச் செயலாளருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி, இலங்கையில் விவசாயத்தை விட கஞ்சா செய்கைக்கு ஜனாதிபதி முக்கியதுவம் வழங்கியுள்ளார் என குற்றஞ்சாட்டினார். 

 நுவரெலியா திறந்த பொருளாதார மத்திய நிலைய காரியாலயத்தில் நேற்று ( 20) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அருணசாந்த ஹெட்டியாராச்சி மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியில்,  விவசாயிகள் வீதியில் இறங்கி போராட வேண்டிய சுழ்நிலை ஏற்பட்டது. அத்தோடு விவசாயிகள்  அநாதைகளாக்கப்பட்டனர். அதன் பின் விவசாயிகள் கொஞ்சம் தலை நிமிர்ந்த போது புதிய ஜனாதிபதி தனது அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி நல்ல வரவு- செலவு திட்டத்தை முன்வைப்பார். என நாம் நினைத்தோம் ஆனால், அது நடக்கவில்லை என்றார். 

சிறு விவசாயிக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சின் செயலாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி விவசாய நிவாரணம் கேட்டோம். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் என்றும் உரம் மற்றும் விதைகளின் விலையை குறையுமென எதிர்பார்த்தோம்.ஆனால் நாங்கள் எதிர் பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை.
 
வரவு- செலவுத் திட்டத்தில் கஞ்சா பயிரிடுவது உகந்தது என கூறப்பட்டதுள்ளது. விவசாயிகளுக்கு கஞ்சா நன்மை பயக்கும், அதன் பிறகு விவசாயத்தை விட்டுவிட்டு காய்கறிகளுக்கு பதிலாக கஞ்சா பயிரிட வேண்டும்,  கஞ்சா பால் குழம்பு செய்து சாப்பிட வேண்டும். என்பதை கண்டறிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றஞ்சாட்டினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .