2025 மே 05, திங்கட்கிழமை

விஷம் அருந்திவிட்டு பாடசாலை வந்த மாணவன்

Editorial   / 2023 நவம்பர் 21 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷம் அருந்திய நிலையில் பாடசாலைக்கு வந்த பாடசாலை மாணவர் ஒருவர் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் (21) அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் பிரதான தமிழ் பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 16 வயதுடைய மாணவன் ஒருவரே இவ்வாறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அந்த பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் தன்னையும் தனது சகோதரியையும் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்த மாணவன்   தோட்டத்தில் இருந்த    பூச்சிக்கொல்லி திரவத்தை குடித்துவிட்டு பாடசாலைக்கு வந்ததாக வட்டவளை வைத்தியசாலை வைத்தியர்களிடம் மாணவன் தெரிவித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மாணவன் பாடசாலைக்கு  வந்ததாக பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்ததையடுத்து, ஆசிரியர்கள் உடனடியாக மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X