R.Maheshwary / 2022 மார்ச் 13 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் பிரதேசத்திலுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு முகவர் நிறுவனங்களுக்கு முன்பாக இன்று (13) அதிகாலை 5 மணி தொடக்கம் நீண்ட வரிசைகளில் நுகர்வோர் காத்திருந்தனர்.
இவ்வாறு காத்திருந்த நுகர்வோரில் பலர், வரிசையில் சமையல் எரிவாயு வெற்று சிலிண்டரை மாத்திரம் வைத்துவிட்டு வீடுகளுக்குச் சென்றிருந்தமையும் அவதானிக்க கூடியதாக இருந்த நிலையில், மேலும் சிலர் தமக்கு கேஸ் கிடைக்கும் வரை முகவர் நிலையங்களுக்கு முன்பாகவே காத்திருப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று (13) ஹட்டன் நகருக்கு சமையல் எரிவாயு கொண்டு வரப்பட்ட நிலையில், இவ்வாறு மணித்தியால கணக்காக காத்திருந்த நுகர்வோருக்கு டோக்கன் வழங்கப்பட்டு சமையல் எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, தமது முகவர் நிலையங்களுக்கு தேவையான எரிவாயு விநியோகிக்கப்படாமையே, நுகர்வோர் இவ்வாறு செயற்படுவதற்கு காரணம் என ஹட்டன் நகரிலுள்ள சமையல் எரிவாயு முகவர் நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026