R.Maheshwary / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
ப்ரோடெக்ட் சங்கமானது,தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் அரசியலில் ஸ்திரதன்மையின்மை போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கினிகத்தேனையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நேற்று மேற்கொண்டனர்.
வீட்டுப் பணிப்பெண்களாக இருப்பவர்கள் இக்காலக்கட்டத்தில் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்தே மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டம் தொடர்பாக புரோடெக்ட் அமைப்பின் நுவரெலியா மாவட்டத்திற்கான அமைப்பாளராக செயற்படும் கருப்பையா மைதிலி கருத்து தெரிவித்த போது,
ப்ரோடெக்ட் அமைப்பில் கூடுதலாக இருப்பது நாளாந்த கூலிவேலை செய்பவர்களாவார்கள்.தற்போது விலைவாசி உயர்வோடு இன்னும் பல்வேறு பிரச்சினைகளால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர்.இதன் காரணமாக அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்.தற்போது பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைகளை பேசப்படல் வேண்டும் ஆனால் மேற்படி ஒன்று தற்போது இடம்பெறாததால் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.
இன்று பொதுமக்கள் வீதிக்கு இறங்கியிருப்பது பணத்தை கேட்பதற்காகவல்ல, அத்துடன் இன்று அரசாங்கம் பல்வேறு நாடுகளில் கடன்பட்டுள்ளது. மேலும் சர்வதேச நாணயநிதியத்தில் கடன்படுவதற்கும் எதிர்பார்த்துள்ளது. எனவே அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர்கள் சொகுசு வாழ்க்கை வாழ ஏன் நாம் எமது பரம்பரையே கடன் செலுத்த வேண்டும்.
ஆனால் பாராளுமன்றத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு யாரை நியமிப்பது என்று வாதங்கள் அங்கு நிலவுகின்றது.ஆனால் மக்களுடைய உண்மையான பிரச்சினைகளை பேசுவதற்கு யாரும் தயாரில்லை.
அத்துடன் நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகின்றது. அதை பற்றி பேசுவதற்கு யாரும் தயாரில்லாத நிலையிலே இருக்கின்றனர்.எனவே இவர்கள் கேட்காததன் காரணத்தில்தான் இன்று மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.எனவே மக்கள் வாக்களித்த 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் பிரச்சினைகளை செவிமெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago