Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Janu / 2023 செப்டெம்பர் 11 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
காவத்தை பொலில் பிரிவிலுள்ள காவத்தை தோட்டக் கம்பனிக்கு கீழ் இயங்கும் வெள்ளாந்துறை 3 ஆம் இலக்க தோட்டத்தில் தோட்ட தொழிலாளிகளால் இட நெருக்கடி காரணமாக சொந்த செலவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடொன்றை தோட்ட நிருவாகம் எவ்விதமான முன்னறிவித்தலுமின்றி காட்டுமிராண்டித்தனமாக உடைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டில் தாய், தந்தை மகன்மார் இருவர், மகள் ஆகிய மூவரின் துணைவிமார் மற்றும் பேரப்பிள்ளை 09 பேர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 09 பேரும் ஒரேவீட்டில் ஒன்றாக வசிக்க முடியாத நிலையில் தமது வீட்டுக்கருகில் தற்காலிகமாக இரண்டாவது மகனான சதீஸ்குமார் என்பவர் வீடொன்றை அமைத்துள்ளார். அந்த வீட்டையே தோட்ட நிருவாகம், சுமார் 10 பேரை ஏவிவிட்டு கடந்த 08 ஆம் திகதியன்று உடைத்து தகர்த்துள்ளது.
மாத்தளை ரத்வத்த தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீடு இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக உடைத்து தகர்த்தப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் தற்போது இரத்தினபுரி மாவட்டத்தில் இவ்வாறு தொழிலாளியின் வீடு உடைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மலையக தலைவர்கள் பலரும் தமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டு வருகின்றனர்.
இது இவ்வாறிருக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர்வழங்கல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சனிக்கிழமை (09) மாலை இத்தோட்டத்திற்கு நேரடியாக சென்று நிலைமையை அவதானித்து அவர்களுக்கு புதிய வீடொன்றை கட்டிக் கொடுக்கப்பட வேண்டுமென தோட்ட நிருவாகத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் காலத்தில் காவத்தை பகுதியில் அமைக்கப்படவுள்ள வீடமைப்பு திட்டத்தில் இக் குடும்பத்தினருக்கு புதிய வீடொன்றை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டதுடன் இக் குடும்பத்தில் சேர்ந்த யுவதியொருவர் பல்கலைகழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு மாதாந்தம் புலமைபரிசில் வழங்கவும் தான் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.
உமாமகேஸ்வரி
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago