2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வீதியின் இரு புறமும் வாகனங்கள்

Freelancer   / 2022 மார்ச் 04 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இல்லாமையினால் வாகனச் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.  

தலவாக்கலை நகரில் எரிபொருள் பற்றாக்குறையால் வீதியின் இரு புறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. 

கொட்டக்கலை, தலவாக்கலை நகரங்களில் இன்று (4) காலை முதல் வாகனங்கள் வரிசை வரிசையாக நின்றன. 

தலவாக்கலை நகரில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தமையினால் வீதி போக்குவரத்து இரு புறங்களிலும் பாதிக்கப்பட்டன. 

வீதியை சீர்செய்யும் நடவடிக்கைகளில் தலவாக்கலை போக்குவரத்து பொலிஸார் ஈடுப்பட்டனர். 

தலவாக்கலை, கொட்டகலை, பத்தனை, வட்டகொட, லிந்துலை, நாகசேன, ரஹான்வத்தை, மெரயா,ஹோல்புரூக்,மன்ராசி,அக்கரப்பத்தனை, டயகம, போபத்தலாவ போன்ற மலையக பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள வாகன சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் சாரதிகள் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகி வருகின்றனர். 

இதனால் பெருந்தோட்டங்களின் அன்றாட நடவடிக்கைகளும் மரக்கறி போக்குவரத்தும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X