R.Maheshwary / 2022 மார்ச் 10 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இரத்தோட்டை- ரிவஸ்டன் வீதியின் தங்கந்த பிரதேச வீதியிலிருந்து தெய்வச் சிலைகள் சில இன்று (10) மீட்கப்பட்டுள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிலைகள், உரப் பையொன்றில் போட்டிப்பட்டிருந்த நிலையில், பிரதேசவாசியொருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பொலிஸாருக்கு பிரதேசவாசிகள் அறிவித்த பின்னர், அச்சிலைகள் கோவில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சிலைகள் லக்கல பிரதேசத்திலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது என, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சிலைகளில் ஒன்று களிமண்ணாலும், மற்றொன்று வெள்ளியாலும் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இது தொன்மையானதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Jan 2026