Editorial / 2022 பெப்ரவரி 21 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்
200 வருட பழமை வாய்ந்த ஆலமரமொன்றின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது அதன் கிளையொன்று உடைந்து, வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில் அதை செலுத்திய நபர் உயிரிழந்து சம்பவம் தலவாக்கலை லோகி தோட்டத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது
தலவாக்கலை- ஹட்டன் பிரதான வீதியில் லோகி தோட்ட பிள்ளையார் ஆலயத்துக்கு அருகாமையிலேயே இச்சம்பவம், இன்று (21) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், தலவாக்கலை லோகி தோட்டத்தைச் சேர்ந்தவரும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய பாடசாலையின் ஆசிரியருமான வேலுசாமி மகேஸ்வரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டிலிருந்து தலவாக்கலை நகருக்கு சென்றுக்கொண்டிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபரை ஓட்டோவொன்றில் ஏற்றி, லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோவும் சேதமடைந்துள்ளது.
வன திணைக்களத்தின் அனுமதியுடன் அந்த மரத்தின் கிளைகள் வெட்டப்பட்டுள்ளது எனினும், உரிய பாதுகாப்பின்றி மரத்தின் கிளைகளை வெட்டியதாக விசனம் தெரிவித்துள்ள பொதுமக்கள் அவ்விடத்தில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“200 வருடம் பழைமை வாய்ந்த மரத்தினை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்தது யார்”? “பிரதான வீதியில் 100 ற்கு கணக்கான வாகனங்கள் செல்லும்போது அவ்வீதிக்கு அருகாமையில் இருக்கும் இந்த மரத்தின் கிளைகளை பாதுகாப்பின்றி வெட்ட அனுமதி கொடுத்தது யார்?”. “உரிய பாதுகாப்பு வழங்காமல் மரத்தினை வெட்டியதால் இன்று அப்பாவி உயிர் போய்விட்டது” உள்ளிட்ட போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஹட்டன்- தலவாக்கலை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டது. என்பதுடன் சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago