2025 மே 05, திங்கட்கிழமை

‘வெட்டுப்புள்ளிகளில் மாணவர்களுக்கு அநீதி’

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

அண்மையில், பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகியுள்ள நிலையில், இதன்மூலம், மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என, பாடசாலைகளை பாதுகாப்பும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்தார்.

இதைச் சுட்டிக்காட்டி, இன்று (24), நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கும்போது, உரிய நடைமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என, இந்த அமைப்பு தெரிவித்திருந்தது.

இதன்போது கருத்துத் தெரிவித்த ராமராஜ், இறுதியாக நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையானது, புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்துக்கு அமைவாகவுமே, இரண்டு முறைகளில் நடைபெற்றது என்றும் எனினும் இந்த அடிப்படையில், வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கும் போது, இந்த முறைமை கடைபிடிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

இதனால், மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் எதிர்காலத்தில், தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கான நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இன்று நுவரெலியாவில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் எதிர்காலத்தில் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என்று கூறிய அவர், எனவே, இதற்கு, அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X