2025 மே 15, வியாழக்கிழமை

வெளிநாட்டு ஆசைக் காட்டிய அதிபர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமு தனராஜா

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, இளைஞர்க​ளை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்ட அதிபர் ஒருவர் உள்ளிட்ட மூவர்,  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 பதுளை, மடூல்சீமை , பசறை , லுணுகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் தொடர்பில் பதுளை, பசறை, லுணுகலை ஆகிய பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பதுளை பொலிஸாரினால் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

 இதற்கமைய, இருவரரையும்  எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

 இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக நபரான லுணுகலை பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் அதிபர் நேற்று முன்தினம் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அதிபரையும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .