2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் இறப்புக்கான காரணம் வெளியானது

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 23 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

எல்ல பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் தங்கியிருந்த செக் குடியரசைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி, இந்த மாதம் 20ஆம் திகதி, தான் தங்கியிருந்த விடுதியின் இரண்டாம் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.

இதற்கமைய, பிரேத பரிசோத​னையை முன்னெடுத்த பதுளை பொது வைத்தியசாலையின் நீதிமன்ற வைத்தியர் டபிள்யு. எம்.கே.பி. விஜேதுங்க, குறித்த சுற்றுலாப் பயணியின் தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த அடியே மரணத்துக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.

இவரது சடலமானது, இலங்கையிலுள்ள செக் குடியரசின் தூதுவராலயம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பிலுள்ள பிரபல தனியார் மலர்ச்சாலையொன்றிடம் நேற்று (22) கையளிக்கப்பட்டது என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X