2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வேடுவர்களின் அருங்காட்சியம் சேதம்

Freelancer   / 2022 நவம்பர் 08 , மு.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹியங்கனை, தம்பானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வேடுவர்களின்  அருங்காட்சியம் மழையால் சேதமடைந்துள்ளது.

அருங்காட்சியகத்துக்குள் மழைநீர் புகுந்துவிட்டது. இதனால், அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் உள்ளூர் மற்றும் ​வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், நம் நாட்டிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பழங்கால பூர்வகுடிகளின் 9 மண்டை ஓடுகளும், அவற்றில் இரண்டு உடல்களின் எலும்புகளும் ஸ்காட்லாந்தில் உள்ள எடிமாப்ரோ பல்கலைக்கழகத்தில் 250 முதல் 300 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தன.

இவை, பூர்வகுடிகளின் தலைவரான ஊருவரிகே வன்னியல எத்தோனிடம் 2019 இல்  ஒப்படைக்கப்பட்டன. அவை இந்த அருங்காட்சியகத்தில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .