2025 மே 16, வெள்ளிக்கிழமை

​​வேட்டையர்களிடமிருந்து தப்பிய மான்

R.Maheshwary   / 2023 ஜனவரி 16 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

வேட்டையர்களிடமிருந்து தப்பி வந்த மானொன்று, வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை நகரிலுள்ள வர்த்தக நிலையத்தின் பின்புறமாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாமொன்றுக்குள் குறித்த மான் பதுங்கியிருப்பதை வர்த்தக நிலையத்தின் பணியாளர்கள் இன்று (16) காலை கண்டுள்ளனர்.

இதனையடுத்து நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

கூடாரத்தில் பதுங்கியிருந்த மானின் உடலில் காயங்கள் காணப்படுவதால் குறித்த மான் வேட்டையர்களின் பிடியிலிருந்து தப்பி வந்திருக்கலாம் என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .