2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

வேவல்கெட்டியவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு இல்லை

R.Maheshwary   / 2022 ஜூன் 08 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். குமார்

மண்சரிவு காரணமாக தற்காலிக முகாமில் தங்கியுள்ள இரத்தினபுரி- ஹப்புகஸ்தென்ன வேவல்கெட்டிய கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 9 குடும்பங்களையும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள குடியிருப்புகளுக்கே சென்று வசிக்குமாறு அதிகாரிகள் பணித்துள்ளனர்.

மே மாதம் 31ஆம் திகதி குறித்த தோட்டத்திலுள்ள லயகெ குடியிருப்பு ஒன்று மண்சரிவு எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளது. இதனால் 9 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கியுள்ளனர்.

 இந்த நிலையில், நேற்று முன்தினம் (6) மண் சரிவு ஏற்பட்ட இடத்தைப் பார்வையிட இரத்தினபுரி மாவட்ட தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரியொருவரும் கிராம உத்தியோகத்தரும் வருகைத் தந்து பார்வையிட்ட பின்னர், குறித்த மண்சரிவு எச்சரிக்கை பாரிய ஆபத்து இல்லை என தெரிவித்ததுடன், மண் சரிவு ஏற்பட்டுள்ள இடங்களை மண் இட்டு நிரப்பி இரப்பர் சீட் போட்டு மூடி கொண்டு   அந்த  வீடுகளிலேயே வந்து
தங்குமாறு அறிவித்தனர்.

எனினும்  பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு வந்து தங்க முடியாது என
வருகை தந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X