2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஸ்தம்பிதமடைந்த ஸ்டொக்கம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மஸ்கெலியா ஸ்டொக்கம் தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தோட்டத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூளை கொழும்பு- ஏல நடவடிக்கைக்கு அனுப்புவதற்கு தடையை ஏற்படுத்தும் தொழிற்சங்கப் பேராட்டத்தை நேற்று முன்தினம் (20) ஆரம்பித்தனர்.

ஸ்டொக்கம் தோட்டத்திலுள்ள அதிகாரியொருவரை இடமாற்றம் செய்யவும் ஏனைய தோட்டங்களைச் ​சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல்  உள்ளிட்ட பல விடயங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்கப் பேராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான போராட்டம் ஒன்றும் தொழிற்சாலைக்கு முன்பாக நேற்று முன்தினம் (20) முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் முன்வைத்தும், இதுவரை தோட்ட நிர்வாகம் இதற்கான உரிய பதிலை வழங்கவில்லை என்றும் தமக்கு சாதகமான முடிவு கிடைக்கும் வரை ஒரு கிராம் தேயிலைத் தூளையேனும் தோட்டத்திலிருந்து வெளியே கொண்டுச் செல்ல அனுமதி தரப்போவதில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .