Princiya Dixci / 2016 ஜூன் 04 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு. இராமசந்திரன்
அம்பகமுவப் பிரதேச சபைக்குட்பட்ட ஹட்டன் எபோட்சிலி பிரதான வீதியில் கலனிவத்தப் பகுதியில் பாலம் உடைந்துள்ளமையால், இன்று சனிக்கிழமை (04) காலை 10 மணிமுதல் போக்குவரத்துப் பாதிப்படைந்துள்ளது.
பாலத்தில் வெடிப்புடன் பாரிய குழியொன்றும் ஏற்பட்டுள்ள நிலையில் சிறிய ரக வாகனங்கள் மாத்திரமே பயணிக்கக்கூடியதாகவுள்ளது.
ஹட்டன் எபோட்சிலி மார்க்கத்தில் சேவையிலீடுபடும் பயணிகள் பஸ்களும் குறித்த பாலத்தைக் கடந்து செல்ல முடியாத நிலையில் பயணிகள் நடந்து செல்கின்றனர்.
பாலத்தில் ஏற்பட்டுள்ள குழியானது மேலும் உடைப்பெடுப்பதால் போக்குவரத்து முற்றாகத் தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
குன்றும் குழியுமாகக் காணப்படும் குறித்த பாதையையும் உடைந்துள்ள பாலத்தையும் உடனடியாகப் புனரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago