2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹட்டனில் அனுமதியற்ற சுற்றுலா விடுதிகள்

R.Maheshwary   / 2022 மார்ச் 20 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன்- டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித பதிவுகளும் அனுமதிகளும் இன்றி, சுற்றுலா ஹோட்டல்கள் நடத்திச் செல்லப்படுவதாகவும் அவ்வாறான ஹோட்டல்களில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் உள்ள சில வீடுகளில் சுற்றுலாப் பயணிகள் தங்கவைக்கப்பட்டு, அவர்களுக்கான உணவு விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் குறித்த இடங்களில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பொறுப்பை ஏற்பதற்கு எவரும் முன்வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த, ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன், குறித்த நகர சபைக்குட்பட்ட பகுதியில் இதுவரை ஒரேயொரு சுற்றுலா ஓட்டல் மாத்திரமே முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனினும் பல இடங்களில் எவ்வித அனுமதியும் பெறாமல் நடத்திச் செல்லப்படும் சுற்றலா விடுதிகளால் பல்வேறு சிக்கல்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளது என்றார்.

எனவே எவ்வித அனுமதியும் இன்றி நடத்திச் செல்லப்படும் சுற்றுலா விடுதிகள் தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையொன்றை முன்வைக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X