2025 மே 05, திங்கட்கிழமை

ஹட்டனில் ஐந்து பாடசாலைகளுக்கு பூட்டு

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

நாட்டில், 6ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையான மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக, பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட 5 பாடசாலைகள்,  மாணவர்கள் வருகை இன்மை காரணமாக, இன்று (24) இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தது.

பெருந்தோட்டப் பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, வெளிஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயம், ஆக்ரோயா தமிழ் மகா வித்தியாலயம், அம்பகஸ் தலாவ தெவிகஸ்தென்ன சிங்கள வித்தியாலயம், அக்காரபிட்டிய நிஸ்ஸங்க மல்ல சிங்கள வித்தியாலயம், மாதெனிய சிங்கள பாடசாலை ஆகிய பாடசாலைகள் ஒரு வாரத்துக்கு மூடப்படவுள்ளது என, ஹட்டன் வலையக்கல்வி பணிமனை அறிவித்துள்ளது.

இதேவேலை சில பாடசாலைகளில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, தரம் 10.11.12.13 வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் மாத்திரம் உள்ளவாங்கப்பட்டுள்ளது.

அத்துடன், தரம் 11 வரையுள்ள பாடசாலைகளில், தரம் 10, 11 மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளனர் என்றும் 6 தொடக்கம் 9 வரையான மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X