2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

ஹட்டனில் ஓட்டோக்களை தூக்கிய பொலிஸார்

R.Maheshwary   / 2022 மார்ச் 13 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் நகர மத்தி மற்றும் நகரின் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓட்டோக்களை  அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஓட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், நகருக்கு ஏனைய வாகனங்களில் வருகைத் தருபவர்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் பல சிரமங்களுக்கு முகம்​கொடுப்பதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதுதொடர்பில் நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, நகர சபையிடம் அனுமதி பெற்ற ஓட்டோக்களை மாத்திரம் நகரில் நிறுத்தி வைக்க ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனுமதிபெறாத ஓட்டோக்களை ஓட்டோ நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்கு எதிராக செயற்படும் ஓட்டோ உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X