2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஹட்டனில் காஸ் விநியோகத்துக்கு புதிய திட்டம்

R.Maheshwary   / 2022 மே 29 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

ஹட்டன் நகருக்கு லிட்ரோ மற்றும் லாப் ஆகிய நிறுவனங்களால் விநியோகிக்கப்படும்  மட்டுப்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நியாயமான முறையில் நுகர்வோருக்கும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் விற்பனை முகவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹட்டன் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி விஜித அல்விஸ் மற்றும் ஹட்டன் நகர சமையல் எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் இடையில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே, அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

ஹட்டன் நகரில் சில ஹோட்டல்களின் உரிமையாளர்கள், தரகர்களைப் பயன்படுத்தி  சிலிண்டர்களை சேகரித்து, பின்னர் அதனை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் இதனால் சாதாரண நுகர்வோர் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்தே குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

எனவே ஹட்டன் நகரில் ஒரு முகவர் நிலையம் ஊடாக மாத்திரம்  உரிமையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டரை விநியோகிக்கவும் ஏனைய விற்பனை முகவர் நிலையங்கள் ஊடாக கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட்ட  நுகர்வோருக்கு மாதத்துக்கு ஒரு சிலிண்டரை  விநியோகிக்கும் திட்டமொன்றை கொண்டு வருமாறு பொலிஸ் அதிகாரியால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைக்கு, சமையல் எரிவாயு விற்பனை முகவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதுடன்,  விநியோக நடவடிக்கையின் போது, பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலையடுத்து, ஹட்டன் நகரின் நடைபாதைகளில் ஒன்றன் பின் ஒன்றாக கட்டி வைக்கப்பட்டிருந்த வெற்று சிலிண்டர்களை உரிமையாளர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .