R.Maheshwary / 2022 மே 08 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
ஹட்டன் நகரிலுள்ள சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு கடந்த சில தினங்களாக டீசல் விநியோகிக்காமை காரணமாக, ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து தினமும் குறுகிய மற்றும் தூர இடங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் பல சேவையிலிருந்து விலகியுள்ளன.
ஹட்டன்- நுவரெலியா, ஹட்டன்- கொழும்பு, ஹட்டன்- கண்டி உள்ளிட்ட தூர இடங்களுக்கான சேவையும் பொகவந்தலாவை, தலவாக்கலை, மஸ்கெலிய உள்ளிட்ட குறுகிய இடங்களுக்கான சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
சில தனியார் பஸ்கள் எரிபொருளுக்காக பல நாள்களாக எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஹட்டனிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போத்தல்கள், கேன்களில் எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago