2025 மே 15, வியாழக்கிழமை

ஹட்டனில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது

R.Maheshwary   / 2023 ஜனவரி 22 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

ஹட்டன் பிரதேசத்திற்கு நீர் வழங்கும் குளங்களின் நீர் மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளமையால்  ஹட்டன் பிரதேசத்துக்கான  நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  நீர்வழங்கல் சபையின் ஹட்டன் அலுவலக நிலைய பொறுப்பதிகாரி ஜனக  ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,  தற்போது மலையகத்தில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, ஹட்டன் பிரதேச மக்களுக்கு நீரை விநியோகிக்கும்  ஹட்டன் சிங்கமலை குளம் மற்றும் டிக்கோயா  ஒட்டரி  குளம் என்பவற்றிலும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் பிரதேசத்தின் நீர் பாவனையாளர்களுக்கு தினமும் நீர் விநியோகம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும், இதனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் பாவனையாளர்களுக்கு வழங்கப்படுவதாகவும் ஜனக ஹேரத் மேலும் தெரிவித்தார்.

நீர் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தவும் நீர் வழங்கல் சபையின் ஹட்டன் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .