2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஹட்டனில் பற்றாக்குறை

Freelancer   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் உள்ள சில தனியார் மருந்தகங்களில் ஒளடத பற்றாக்குறை நிலவுவதாக நோயாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். 

டிக்கோயா, கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவை ஆகிய வைத்தியசாலைகளுக்குச் செல்லும் தங்களுக்கு, அங்கு தேவையான ஒளடதங்கள் இன்மையால், வெளியில் பெற்றுக்கொள்ளும் மருந்து வகைகள் எழுதப்பட்ட துண்டுகள் வழங்கப்படுகின்றன. 

அவற்றைக் கொண்டுவந்து தனியார் மருந்தகங்களில் காண்பித்தால், அவ்வாறான மருந்துகள் தம்வசம் இல்லையென பல மருந்தங்களில் தெரிவிக்கின்றனர் என்றும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, இன்னும் சில மருந்தகங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது என்றும் நோயாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒளடதங்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக, தாங்கள் பல்வேறான சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .